20 ஆவது திருத்தத்துக்கு நேர்ந்த கதியே நிகழ்நிலைகாப்பு சட்டமூலத்துக்கு நேரிடும்! கிரியெல்ல சாட்டை
மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் என்பனவற்றில் சிங்கப்பூர் முன்னேற்ற நிலையில் இல்லை. ஆகவே சிங்கப்பூர் நாட்டின் மாதிரியிலான வகையில் நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு நேர்ந்த கதியே நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கும் நேரிடும். அரசாங்கத்துக்கு எதிரான கருத்தைக் குறிப்பிடும் சகலரையும் பயங்கரவாதிகள் என்றும் சித்திரிக்கும் நிலைப்பாட்டில் இருந்துகொண்டு அரசாங்கம் செயற்படுகிறது என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்துக்களேதுமில்லை