புத்தளம், கற்பிட்டி கடலில் சட்ட விரோதமாக சங்குகள் பிடித்த மூவர் கைது

புத்தளம் , கற்பிட்டி கடலில் சட்டவிரோதமான முறையில் சங்குகள் பிடித்த குற்றச்சாட்டில் மூவர் நேற்று வியாழக்கிழமை (25) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் புத்தளம் , கற்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 12 முதல் 48 வயதுக்குட்பட்டவர்களாவர்.

இலங்கை கடற்படையினரால் கற்பிட்டி கடற்பரப்பில் செய்யப்பட்ட சோதனையின்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் படகு ஒன்று காணப்பட்டுள்ளது.

தொடர்ந்து விசாரித்தபோதே இந்த படகில் இருந்து சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 1,856 சங்குகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், கைப்பற்றப்பட்ட படகு மற்றும் சங்குகளுடன் மேலதிக விசாரணைக்காக புத்தளம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.