அனர்த்த முகாமைத்துவ நிலைய முன்னாயத்தக் குழுக் கூட்டம்!
ஹஸ்பர் ஏ.எச்
மொறவௌ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பனிக்கட்டியா கிராம உத்தியோகத்தர் பிரிவில் எத்தாபந்திய கிராமத்தில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் முன்னாயுத்த குழு கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.
இக்குழு கூட்டத்தில் இயற்கை அனர்த்தம் தொடர்பான குளங்களின் ஊடாக நீரானது மேலதிகமாக சென்று விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு காணிகளில் சேதம் ஏற்படுவதைத் தடுப்பதற்கான ஆலோசனைகள் பங்கு பற்றிய மக்களுக்குத் தெளிவு படுத்தப்பட்டது. மேலும் பனிக்கட்டியாவ பிரதேசத்திற்கான கிராம நிர்வாகத் திட்டமும் செய்து முடிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் கு.சுகுணதாஸ், கிராம உத்தியோகத்தர் விற்கும் சன்ஜீவ விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் ம.ஹேமச்சந்துரு, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ம.எமல்ராஜ், அனர்த்த முகாமைத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தர் தக்ஷன் மற்றும் சமுத்தி உத்தியோகத்தர் சந்திரசிரி எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை