மயோன் முஸ்தபா பல்லூடக ஆராய்ச்சி அபிவிருத்தி பிரிவு சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியில் அங்குரார்ப்பணம்!
நூருல் ஹூதா உமர்
முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் மர்ஹூம் எம்.எம். முஸ்தபாவின் (மயோன் முஸ்தபா) ஞாபகார்த்தமாக அவர்களின் புதல்வரும் றிஸ்லி முஸ்தபா கல்வி மேம்பாட்டு மற்றும் சமூக சேவை அமைப்பின் ஸ்தாபகருமான றிஸ்லி முஸ்தபாவின் அனுசரணையில் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமுஃகமுஃ அல்-ஜலால் வித்தியாலயத்தில் மர்ஹூம் மயோன் முஸ்தபா பல்லூடக ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவு இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். சைபுதீனின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ரிஸ்லி முஸ்தபா கல்வி உதவி மற்றும் சமூக அமைப்பின் ஸ்தாபகர் றிஸ்லி முஸ்தபா பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.
இந்நிகழ்வில் இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை நினைவு கூரும் வகையில் தேசிய கொடி பிரதம அதிதியால் ஏற்றி வைக்கப்பட்டு மர்ஹூம் மயோன் முஸ்தபா பல்லூடக ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவின் திறப்பு விழா இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலையின் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய உப பரிசோதகர் ரவூப் விசேட அதிதியாகக் கலந்து கொண்டதுடன் பாடசாலையின் பிரதி அதிபர் டீ.கே.எம். சிராஜ், உதவி அதிபர் எம்.ஏ.எம். சிராஜ், பாடசாலை ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு செயலாளர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை