வாழைச்சேனை இந்துவுக்கு புதிய அதிபர் கடமையேற்பு!
அபு அலா –
இலங்கை அதிபர் சேவை தரம் – 3 இற்கான நியமனத்தைப் பெற்ற திருமதி ஸோபா ஜெயரஞ்சித் வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையின் புதிய அதிபராகத் தனது கடமையை இன்று(செவ்வாய்க்கிழமை) பொறுப்பேற்றுக்கொண்டார்.
குறித்த அதிபரின் தாய்ப் பாடசாலையாக இருக்கும் இப்பாடசாலையில் தனது ஆரம்பக்கல்வி முதல் உயர்தரம் வரை கற்று சிறந்தபெறுபேறு பெற்று ஆசிரியர் சேவையில் 2001-2008 வரை கடமையாற்றியதுடன் இப்பாடசாலைக்கு அதிபர் சேவையின் முதல் நியமனமும் கிடைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை