அம்பிளாந்துறை சுதந்திரம் விளையாட்டு கழகத்துக்கு 3 லட்சம் ரூபா நிதியுதவி!
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அம்பிளாந்துறை வடக்கு சுதந்திரம் விளையாட்டுக் கழக நிர்வாகிகளால் தமது விளையாட்டுக் கழகத்திற்கான பிரத்தியேக மைதானமின்மை தொடர்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்த நிலையில். கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தனால் மைதான தேவையை நிவர்த்தி செய்யும் பொருட்டு முதல் கட்டமாக மூன்று லட்சம் ரூபா நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி விளையாட்டுக் கழகத்தினர் பிரத்தியேக விளையாட்டு மைதானம் இன்மை காரணமாக விவசாய நிலங்களில் விளையாட்டு நிகழ்வுகளை நடத்தி வந்ததோடு, பல்வேறு சிரமங்களையும் எதிர்கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கட்சியின் மண்முனை தென்மேற்கு பிரதேசக்கிளை தலைவர் காமராஜ், முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும், பிரதேசக்கிளை செயலாளருமான குகநாதன், அரசியல் துறைச் செயலாளர் சபேசன், சுதந்திரம் விளையாட்டு கழகத் தலைவர் இராஜேந்திரன், செயலாளர் தில்லைவாசன், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், கட்சியின் அம்பிளாந்துறை வடக்கு மற்றும் மேற்கு கிராமியக்குழு நிர்வாகிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை