அட்டாளைச்சேனை அக்ஃஇக்றஃ வித்தியாலயத்தின்   பிரதி அதிபராக முஹம்மட் பாஹிம் கடமையேற்பு

கே.ஏ.ஹமீட்

அட்டாளைச்சேனை கோட்டக் கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட கமுஃஅக் ஃஅல்- அர்ஹம் வித்தியாலயத்தில் ஆசிரியராக நீண்ட காலமாக கடமையாற்றி இலங்கை அதிபர் சேவையின் தரம் -3 இற்கு பதவி உயர்வு பெற்ற எம்.எஸ். முஹம்மட் பாஹிம் அட்டாளைச்சேனை அக்ஃஇக்றஃ வித்தியாலயத்தின்  பிரதி அதிபராக திங்கட்கிழமை கடமையேற்றுக் கொண்டார்.

சுமார் 18 வருடங்கள் இலங்கை ஆசிரிய சேவையில் ஒரு நல்லாசானாக பணிபுரிந்த இவர் ஆசிரிய ஆலோசகராகவும் சிறிது காலம் கடமையாற்றினார்.

இவரது கடமை ஏற்பு நிகழ்வில் உதவி கல்வி பணிப்பாளர் நொளபர்தீன் மற்றும் அட்டாளச்சேனை அனைத்து அதிபர் சங்கத் தலைவர் ஏ.எம்.அன்சார் மற்றும் அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.