சாதனை முயற்சியில் யாழ்.இளைஞர்கள்!

இலங்கையில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் சுற்றுலாத் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

இத்திட்டத்தின் படி, மூன்று இளைஞர்களும் ஓட்;டோ மூலம் இலங்கையின் 25 மாவட்டங்களையும் 40 நாள்களில் சுற்றிவரத் தீர்மானித்துள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சுற்றுலாவானது யாழ்ப்பாணம் – பருத்தித்துறை – சக்கோடை முனையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. இது குறித்து இளைஞர்கள் கருத்துத் தெரிவிக்கையில் –

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக சுற்றுலாத்துறை வீழ்ச்சி அடைந்துள்ளதால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் விதமாக,வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்குள் வரவழைத்து, அதன்மூலம் கிடைக்கும் வருவாயை அதிகரித்து பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் இந்த இந்தத் திட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளோம்.- இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.