இந்திய அரசியல்வாதிகளுக்கு மதியுரை சேவைகளை வழங்கும் நிறுவனத்திற்கு அநுரவின் குழுவினர் விஜயம்
இந்திய அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் அந்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் விஜயத்தின் இரண்டாவது நாளாகிய செவ்வாய்க்கிழமை புதுடில்லியில் அமைந்துள்ள ஒவ்சேவ்ட் றிசேர்வ் பவுண்டேசன் உலகளாவிய சிந்தனைக் குழு மன்றத்திற்குச் சென்றார்கள்.
ஒவ்சேவ்ட் றிசேர்வ் பவுண்டேசன் என்பது இந்திய அரசாங்கத்தின் கொள்கை வகுப்பதிலும் தீர்மானம் மேற்கொள்வதிலும் இந்திய அரசியல்வாதிகளுக்கும் வர்த்தக சமூகத்திற்கும் மதியுரை சேவைகளை வழங்குகின்ற நிறுவனமாகும்.
அதன் பின்னர் தூதுக்குழுவினர் இந்தியாவின் எலெக்ரோனிக் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சுடன் இணைந்த இந்தியத் தனித்துவ அடையாள ஆணைய அமைப்பைப் பார்வையிட்டதோடு அதன் பிரதானிகளுடன் சுமுகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.
பின்னர் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் அஹமதாபாத் நகரத்தை நோக்கிப் புறப்பட்டனர்.(
கருத்துக்களேதுமில்லை