வீதிகளில் நெல் உலர விடுவதன் காரணமாக வாகன சாரதிகள் பாதிப்பு
பெரும்போக அறுவடை நடைபெற்று வரும் நிலையில் தற்பொழுது மழையும் ஓய்ந்துள்ள நிலையில் அறுவடை செய்த நெற்களில் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விவசாயிகள் நெல்லினை வீதிகளலே உலர விடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
இரவு பகல் பாராமல் தொடர்ச்சியாக வீதியோரங்களிலேயே தமது நெல்களை உலர விடுவதன் காரணமாக வீதிகளால் செல்லும் வாகன சாரதிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர் எனவும் இதன் காரணமாகக் கடந்த காலங்களில் வீதிகளில் நெல் உலர விடுவதன் காரணமாக மூன்று பேர்கள் உயிரிழந்தனர் அத்துடன் செவ்வாய்க்கிழமை இரவும் கிளிநொச்சி நோக்கி பயனித்த உழவு இயந்திரமும் பரந்தன் பகுதியிலிருந்து பயனித்த மோட்டார்சைக்கிளும் மோதியதில் மோட்டார்சைக்கிளில் பயனித்தவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தற்பொழுது வீதிகளில் நெல்லை உலர விட வேண்டிய தேவை என்னவென்று புரியாத நிலையில் உள்ளனர் எனவும் தற்பொழுது மழையும் ஓய்ந்து உள்ளது இதனை விவசாயிகள் கருத்தில் கொள்ளாமல் தொடர்ச்சியாக வீதிகளில் நெல்லை உலர விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர் இதை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை