தம்பலகாமத்தில் நடமாடும் சேவை

 

ஹஸ்பர் ஏ.எச்

பிறப்பு,இறப்பு மற்றும் திருமண பதிவுகள் தொடர்பான நடமாடும் சேவை தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த நடமாடும் சேவை தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்றது. இதில் பிறப்பு, இறப்பு, திருமண பதிவுச் சான்றிதழ்கள் இல்லாதவர்களுக்காக சான்றிதழ்களை பெற்றுக் கொடுத்தல் மற்றும் தேசிய அடையாள அட்டை சிக்கல்களைத் தீர்த்தல், காணி பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெறல் என பல சேவைகளை பொது மக்கள் இதன் போது பயனடைந்தனர்.
இதில் மாகாண காணி ஆணையாளர் தசநாயக்க, உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.