சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரி இரண்டு விரிவுரையாளர் போராட்டம்! அதிபரிடம் மகஜர் கையளிப்பு
சம்மாந்துறை நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ்
சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியின் முன்னால் இரண்டு வருகைதரு விரிவுரையாளர்கள் வியாழக்கிழமை நான்காவது நாளாக போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
வசீம் நப்றீஸ் ஆகிய குறித்த இரு விரிவுரையாளர்களும் சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரி அதிபர் தியாகராஜாவிடம் மகஜர் ஒன்றை கையளித்தனர்.
இதேவேளை விவசாய டிப்ளோமா வருகை தரு விரிவுரையாளரான நிருசனா புள்ளநாயகம் என்பவரையும் இடைநிறுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் , ‘அவரை இடைநிறுத்தக்கூடாது அவர் எங்கள் கல்வி வளர்ச்சிக்குத் தேவை’ எனத் தெரிவித்து மாணவர்கள் கையொப்பமிட்ட மகஜரையும் அதிபரிடம் கையளித்தனர்.
இதை மீறி செயற்பட்டால் ஆர்ப்பாட்டத்தில் இறங்குவோம் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பணிப்பாளர் நாயகத்திற்கு நான் அறிவிக்கிறேன் என அதிபர் கூறியபோது, நாங்கள் ஏற்கனவே அறிவித்துவிட்டோம் என விவசாய சங்கத்தின் பொருளாளர் சியாப் தெரிவித்தார்.
‘மாணவர்கள் இல்லாத வகுப்பிற்கு புதன்கிழமை ரிவிஈசி அங்கீகாரம் எடுத்துள்ளீகள் திறமையாக செயற்பட்ட விவசாய கள உதவியாளர் பாடநெறிக்கு ரிவிஈசி அங்கீகாரம் இல்லை ஏன் இந்த அநீதி? விவசாய பாடநெறிகளை நீங்கள் சதித்திட்டம் மூலம் இல்லாதொழிக்க நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்’, என விவசாய சங்கத்தின் பொருளாளர் சியாப் அதிபரிடம் கேள்வி எழுப்பினார்.
இதனைத்தொடர்ந்து அதிபர் மாணவர்களிடம் எதிர்வரும் புதன்கிழமை வரை கால அவகாசம் கேட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை