கந்தரோடை ஞான வைரவருக்கு சுன்னாகம் லயன்ஸால் மடப்பள்ளி!

 

கந்தரோடைப்பதி அருள்மிகு ஞான வைரவர் ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டு நேற்று (வியாழக்கிழமை) குடமுழுக்கு இடம்பெற்று மஹா கும்பாபிசேகப் பெருவிழா நடைபெற்றது.

இதன்போது கந்தரோடைக் கிராமத்தில் கல்விப் பணியையும் ஆன்மீகப் பணியையும் தாம் வாழ்ந்த காலத்தில் செவ்வனே நிறைவேற்றிய சுன்னாகம் லயன்ஸ் கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களாக இருந்து அமரத்துவமடைந்துள்ள லயன் மகாதேவா – லயன் பூமாதேவி தம்பதிகளின் நினைவாக அவர்களது மகன் லயன் ம.பிரிதுவிராஜா அவர்களின் நிதிப்பங்களிப்பில் ஆலயத்துக்கு மடப்பள்ளியும் அன்னதானம் வழங்குவதற்கான சமையற் கூடமும் அமைத்துக் கொடுக்கப்பட்டு கும்பாபிஷேகப் பெருநாளில் திறந்துவைக்கப்பட்டது.

இந்த மடப்பள்ளியை சுன்னாகம் லயன்ஸ் கழக உறுப்பினர்களான ஆளுநர் அவையின் ஆலோசகர் லயன் சி.ஹரிகரன், பிராந்தியத் தலைவர் லயன் பா.மரியதாஸ், வலயத் தலைவர் லயன் க.டினேஸ், கழக உறுப்பினர் லயன் வசீகரன் ஆகியோர் இணைந்து பெயர்ப்பலகையைத் திரைநீக்கம் செய்து, மடப்பள்ளியைத் திறந்துவைத்தனர்.

லயன் மகாதேவா குடும்பம் கந்தரோடையில் எத்தனையோ ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பேருதவிபுரிந்து அவர்களின் வாழ்வுக்கு ஒளியேற்றியவர்கள். சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி, ஸ்கந்தா ஆரம்பப் பாடசாலை போன்றவற்றுக்கு கட்டடங்கள், சிறுவர் பூங்கா, குடிநீர் வசதி போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுத்ததுடன் பாடசாலைகளின் விளையாட்டு நிகழ்வுகள், பரிசளிப்பு நிகழ்வு போன்றவற்றுக்கு ஏராளமான பங்களிப்பை ஆற்றியவர்கள். ஆன்மீகப்பணியாக கந்தரோடை அருளானந்தப் பிள்ளையார், வற்றாக்கை அம்மன் ஆலயம் போன்றவற்றுக்கு சப்பை ரதம், தேர்முட்டி மற்றும் கட்டடப் பணிகள் என்று ஏராளமாக ஆற்றியவர்கள். அவர்களின் பணிகளை அவர்கள் மறைவுக்குப் பிற்பாடு அவர்கள் செய்த சேவைக்கு ஒருபடி மேலாக அவர்களது பிள்ளைகள் ஆற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.