புதிய கல்விச் சீர்திருத்த முன்னோடி நடவடிக்காக கனகராயன்குளம் ம.வி, ஒட்டிசுட்டான் ம.வி தெரிவு
புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் முன்னோடி திட்டத்திற்காக வடக்கு மாகாணத்தில் இருந்து வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயம் மற்றும் முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் மகாவித்தியாலயம் என்பன தெரிவு செய்யப்பட்டுள்ளன.
புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் தரம் 8-11 வரையான மாணவர்களுக்கு எண்ணிம குடியுரிமைத் திறன்கள் பாடம் ஐ.நாவின் இணை நிறுவனமான யுனிசெப்பின் நிதி அனுசரணையுடன் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதற்காக, இலங்கையின் ஒவ்வொரு மாகாணங்களிலும் இருந்து இரு பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு முன்னோடி செயற்றிட்டமாக பாட அறிமுகத்தை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட 18 ஆசிரியர்களுக்கு ரிஓரி பயிற்சி தேசிய கல்வி நிறுவகத்தில் வழங்கப்பட்டது.
இதன் பிரதான வளவாளர்களாக சிங்கப்பூரைச் சேர்ந்த டிஜிற்றல் ஊடக தளத்தில் நிபுணத்துவம் மிக்க சுவப்னா பவர் மற்றும் கோபல் அஹர்வால் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி வழங்கினர்.
இதனை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு வியாழக்கிழமை சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த செயற்திட்டம் இந்த வருடம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
கருத்துக்களேதுமில்லை