பெரும்போக அறுவடை மும்முரம் கிண்ணியா விவசாயிகள் ஈடுபாடு

ஹஸ்பர் ஏ.எச்

பெரும்போக வேளாண்மை செய்கையின் அறுவடை தற்போது இடம் பெற்று வருகிறது.

கிண்ணியா பகுதியின் குறிஞ்சாக்கேணி கமநல சேவை பிரிவின் சூரங்கல் விவசாய நிலப் பகுதியில் நெற் செய்கை அறுவடை இடம் பெற்ற போதிலும் விளைச்சலில் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் நெல்லுக்காண விலை இன்மை என பல காரணங்களால் பாரிய நஷ்டங்களை எதிர் கொள்வதாக விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.

இந்தப் பகுதியில் சுமார் 1200 இற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் செய்கை பண்ணப்பட்ட நெல் அறுவடை இடம்பெறுகிறது. அண்மையில் ஏற்பட்ட சீரற்ற கால நிலை காரணமாக தங்களது வயல் நிலங்கள் அழிவடைந்ததால் ஓர் ஏக்கருக்கு எட்டு தொடக்கம் பத்து மூடைகளுக்கும் குறைவாகவே விளைச்சல் கிடைப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இயந்திரம் மூலமான வெட்டுக்கூலி, பசளை, கிருமி நாசினி என பல செலவுகள் போக எஞ்சியிருப்பது ஒன்றுமே இல்லை எனவும் தெரிவிக்கின்றனர். பசளைக்கான பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். ஆனால் வங்கியில் சென்று பார்த்தால் எதுவுமே இல்லை உரிய நேரத்துக்கு பசளை தரமான கிருமி நாசினிகளை அரசாங்கம் பெற்றுத் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.