பெண்களின் பெரும்பான்மை பங்களிப்புடன் எதிர்காலத்தில் பலமான அரசு உருவாகும்! நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய உறுதி

(அஸ்ஹர் இப்றாஹிம்)

இந்த நாட்டிலுள்ள பெண்கள் பொருளாதார ரீதியில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை, எமது பெண்கள் மாநாட்டிற்கு திரண்டு வருவதிலிருந்து தெரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.

இவ்வாறு அநுராதபுரத்தில் இடம்பெற்ற பெண்கள் மாநாட்டில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் –

எதிர்காலத்தில் பெண்களின் பாரிய பங்களிப்போடு பலமான அரசாங்கமொன்றை தேசிய ஐக்கிய முன்னணி அமைக்கும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது.

அரசியல் ரீதியில் இதுவரை காலமும் கடைப்பிடித்த தவறான கொள்கையின் பிரதிபலனை இன்று ஒட்டு மொத்த நாடும் எதிர் கொள்ளுகின்றது. பொருளாதார ரீதியில் பெண்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். குடும்ப தலைவிகளாக இருந்து கொண்டு தமது பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான உணவு வழங்குவது மிகவும் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

அரச தலைவர்களின் தவறான பொருளாதார முகாமைத்துவத்தால் குடும்ப பெண்கள் நுண்கடன் திட்டமென்ற கோரப்பிடிக்குள் சிக்கித் தவிக்கின்றனர் என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.