அட்டாளைச்சேனை பள்ளிவாசலுக்கு கிழக்கின் கேடயத்தால் நிதி உதவி!
நூருல் ஹூதா உமர்
அட்டாளைச்சேனை அல் ஜென்னா பள்ளிவாசலின் அபிவிருத்தி வேலைத் திட்டத்திற்கு கிழக்கின் கேடயத்தின் தலைவரும், அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன முன்னாள் தலைவருமான எஸ். எம். சபீஸ் நிதியுதவி வழங்கியுள்ளார்.
பள்ளிவாசல் நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் அங்கு விஜயம் மேற்கொண்ட கிழக்கின் கேடயத்தின் தலைவர் எஸ்.எம்.சபீஸ் பள்ளிவாசலின் தற்போதைய நிலைமை தொடர்பாக அவதானித்தார்.
எதிர் வருகின்ற புனித நோன்பிற்கு முன்பு பள்ளிவாசலின் உட்கட்டமைப்பு நிறைவு செய்ய வேண்டுமென நிருவாகத்தினர் கோரிக்கை விடுத்தனர். அதற்கமைவாக எஸ் எம் சபீஸால் பள்ளிவாசல் ( டைல்ஸ்) தரையை செப்பனிடுவற்காக நிதி வழங்கப்பட்டது.
நிதி வழங்கும் நிகழ்வில் பள்ளிவாசல் தலைவர் எம்.பி. நஸீர், பள்ளிவாசல் பொருளாளரும் முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழு தலைவருமான எஸ்.எல்.ஏ.ஹலீம் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை