ஆசிரியர் இடமாற்ற நடவடிக்கை மாற்றம்

எம்.எப்.நவாஸ்

அண்மையில் அம்பாறை மாவட்ட கல்வி வலயங்களில் கற்பிக்கின்ற ஆசிரியர்களின் இடமாற்றம் சம்பந்தமாக புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குழுவின் இணைத்தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் வேண்டுகோளுக்கு இணங்க , மாவட்டத்தில் ஆசிரியர் வெற்றிடங்கள் அதிகம் காணப்படும் நிலையில், மாவட்டத்திற்கு வெளியே ஆசிரியர்கள் இடமாற்றப்படுவதை இடை நிறுத்தி, மாவட்டத்திற்குள் காணப்படும்  வெற்றிடங்களை நிரப்புவது என்று தீர்மானிக்கப்பட்டது.

இதற்காக, கிழக்கு ஆளுநர் மற்று மாகாண கல்வி அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.