யாழ் இணுவில் பகுதியில் புகையிரதத்துடன் வேன் மோதி விபத்து : குழந்தை உட்பட இருவர் பலி ! ஒருவர் படுகாயம்
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் புகையிரதத்துடன் வேன் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இச் சம்பவம் இன்று புதன்கிழமை (14) மாலை இடம்பெற்றுள்ளது.
வேனில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உட்பட இருவர் பலியாகியுள்ளனர். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகி்ன்றது.
மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை