முல்லை விஸ்வநாதர் ஆரம்பப் பாடசாலையின் புலமைப்பரிசில் சாதனையாளர்கள் கௌரவிப்பு
முல்லை விஸ்வநாதர் ஆரம்பப்பாடசாலையின் 2023 ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் துரிதகணிதம் சாதனைபடைத்த மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு விஸ்வநாதன் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் கோட்டக்கல்விப் பணிப்பாளர்
சி. பாஸ்கரன் மற்றும் யோ.கௌரிநேசனும் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினரின் அனுசரணையில் மாணவர்களின் கற்றல் நடவடிக்கையை மேன்படுத்தும் முகமாக விஸ்வநாதர் பாடசாலைக்கென ஸ்மாட் கல்வி நடவடிக்கை மேற்கொள்வதற்கான கட்டடம் ஒன்றை அமைப்பதற்கு எற்பாடுகள் செய்துதருவதாகவும் உறுதியளித்தார்
இன் நிகழ்வில் ஆசிரியர்களும் விருந்தினர்களும் மதிப்பளிக்கப்பட்டனர்.