நிலாவெளி சுற்றுலா பிரதேச கரையோரம் சுத்தம் செய்கின்ற பணிகள் மும்முரம்!
(கிண்ணியா நிருபர்)
திருகோணணலை மாவட்டத்தின் நிலாவெளி கரையோரத்தை சுத்தம் செய்யும் பணி சனிக்கிழமை இடம் பெற்றது. அதிகளவான வெளிநாட்டு ,உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் இப்பகுதியானது சுத்தம் செய்யப்பட்டது.
புறாமலை போன்ற சுற்றுலா பகுதிக்கான இடமாகவும் உள்ளமையால் கரையோரம் சுத்தம் செய்யும் பணி இடம் பெற்றது. அதிகளவான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை இங்கு அதிகரித்துள்ளது இதன் மூலம் இப் பகுதியில் கடல் பிரதேசத்தின் ஒரு தீவில் புறாமலை எனும் சுற்றுலா பிரதேசத்தை நோக்கி அதிகம் பயணிக்கின்றனர். படகு மூலமாக இப் பிரதேசத்தை அடைய வேண்டியுள்ள நிலையில் மனதுக்கு இதமான தீவாகக் காணப்படுகிறது.
இதனை நிலாவெளி பகுதியில் உள்ள ஹோட்டல்கள், படகு ஓட்டுனர்கள், ஓட்டோ சங்கங்கள்,கரையோர பாதுகாப்பு திணைக்களம்,பொலிஸார்,ரைவிங் பாடசாலை என பல அமைப்புக்கள் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்ததுடன் சுமார் 7கிலோ மீற்றர் தூரம் வரையான கரையோர பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டன. இதன் மூலம் சுற்றாடலைப் பாதுகாக்கவும் பொலித்தீன் பாவனை உட்பட ஏனைய சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் கழிவுப் பொருள்கள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன.
இதில் சுமார் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.