பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் டீ சேர்ட் அறிமுக விழா சம்மாந்துறையில்!
(சர்ஜுன் லாபீர்,எல்.எம் நாஸீம்)
சம்மாந்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் நலன்னோம்பல் அமைப்பால் புதிய டீ சேர்ட் அறிமுகம் செய்யும் நிகழ்வு திங்கட்கிழமை பிரதேச செயலக நலன்னோம்பல் அமைப்பின் தலைவரும், பிரதேச செயலாளருமான எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில் பிரதேச செயலக முன்றிலில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய டி சேர்ட்டினை அறிமுகம் செய்து வைத்தார்.
மேலும் இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் யு.எம் அஸ்லம், கணக்காளர் ஐ.எம் பாரிஸ், உதவி திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம் அஸ்லம்,நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம் ஜெமீல்,கிராம நிர்வாக உத்தியோகத்தர் எம்.எல்.எம் தாஸீம், நலன்னோம்பல் அமைப்பின் செயலாளர் எம்.எஸ்.ஏ அன்வர்,பொருளாளர் ஏ.எம் நவாஸ் உட்பட உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.