கிராத் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு!
நாடளாவிய ரீதியில் யு ரிவி நடத்திய கிராத் போட்டியில் 1ஆம், 2ஆம் இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா ,கடந்த சனிக்கிழமை மூதூர், ஸஹ்ரா மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கி வைத்து உரையாற்றினார்.
இதன்போது, மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதி அமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், அரசியல் அதிகார சபை உறுப்பினர் ஹில்மி மொஹிடீன், மூதூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஹரீஸ், சட்டத்தரணி முஹம்மட் மற்றும் உள்ளூராட்சிமன்ற முன்னாள் உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் உட்பட ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்