நக்கீரனுக்கு பகிரங்க மடல்;!
கனடாவில் வாழும் நக்கீரன் என்ற புனைபேர் கொண்ட தங்கவேல் 91 வயது அறளை காரணமாக தேவையற்ற விதமாக எமக்கு எதிராக எழுதுவதை வன்மையாக கண்டிக்கின்றேன் நான் மணியடிக்கும் பூசாரி என்று என்னேயும் என் ஆன்மீக செயற்ப்பாட்டையும் கொச்சைப்படித்தியுள்ளார் சுமந்திரன் சார்பான இன்னெருவரின் பதிவு போடப்பட்டதற்கே இவ்வாறு கூறியுள்ளார் ஒருவரின் முழுப்பெயரை கூறுவதில் என்ன தவறு இன்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி நீதி மன்றம் சென்றதற்கு இத் தங்கவேலும் முக்கிய சூத்திரதாரி இவர்தான் வழக்குக்கு பணம் கொடுத்ததாக கூறப்படுகின்றது முன்பு மாவை ஐயாவை தலைமையில் இருந்து நீக்குனால் மாநாட்டுக்கு பணம் தருவேன் என கூறியவர் இதை அவரிடமே இணையத்தள உரையாடலில் நான்கேட்டுள்ளேன் சம்பந்தன் ஐயா வயது கூடிய காரணத்தால் பாராளுமன்ற உறுப்பினர் பதவி விலகவேண்டும் மாவை ஐயாவை கட்சி தலைமையில் இருந்து துரத்த வேண்டும் என தனது பணத்துக்கு வாலாட்டும் அடிவருடிகள் இங்கு பயன்படுத்திய தங்கவேல் தனது 91வது வயதிலும் தற்போது இயங்காத பதியப்படாத தமிழ் தேசிய கூட்டமைப்பு பதவியை கட்டிப்பிடித்துக்கொண்டு தனது 90 வயது பிறந்தநாளுக்கு கனடா உறுப்பினர்களிடம் பணம் வசூல் செய்தார் நான் யுத்தகளத்தில் கதவு பூட்டப்பட்ட ஆலயங்களை திறக்கவைத்து அதன் பூசகராக இருந்து ஆன்மீக கடமை புரிந்தவர் பணத்துக்காக இப்பணியை செய்பவன் அல்ல எனது சிறுவயது தொடக்கம் இச்சேவையை ஆற்றி வருகின்றேன் பாதுகாப்புபடை அற்ற பகுதிகளிலேயே பெரும்பாலும் இப்பணியை புரிந்துவந்தேன் இது யுத்த சூழலிலும் எம்மண்னை விட்டு நீங்காது எம் சுகத்துக்காக நான்மேற்கொண்ட புனித பணி இதை இழிவாக கூற தங்கவேலுக்கு அருகதை இல்லை இவர் அடிக்கடி எனக்கு பணம் தந்ததாக கூறுகின்றார் இதற்கு விளக்கம் தரவேண்டியது எனது கடமை இவரது கருத்து பணத்தை எனது செலவுக்கு வழங்கியது போல் உள்ளது அப்படியானால் கனடா சட்டதிட்டத்துக்கு கீழ் பதியப்பட்ட அமைப்பு தனது உறுப்பினர்களிடம் பணம் பெற்று கணக்குவழக்கு இன்றி தாம் விரும்பிய இலங்கை அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது புலப்படுகிறது நான் இவரிடம் எப்போதும் பணம் கேட்டவனுமில்லை தங்கவேலன் சொந்தப்பணத்தை பெற்றவனுமில்லை கடந்த 2012 ம் ஆண்டு 7ம் மாதமளவில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்களுடன் கனடா சென்றிருதேன் அவ்வேளை திருகோணமலை மாவட்டத்தின் எங்கள் கட்சியின் தற்போதய தலைவர் ஐயா குகதாசன் அவர்கள் கனடாவில் இருந்தார் அவர் தாங்கள் சார்ந்த அமைப்பான தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மூலம் விருந்துபசாரத்துக்கு அனைத்து உறுப்பினர்களையும் அழைத்து நடாத்தினார் இதில் நாங்கள் இருவரும் கலந்துகொண்டோம் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டவர்களிடம் அவர்கள்தான் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது தமிழ் உறவுகளுக்கு உதவுவதாக நிதி வசூல் செய்தார்கள் நாங்கள் பணம் கேட்க வில்லை ஆனால் நாங்கள் இலங்கை வந்தசில மாதத்தின் பின் விதவைகளுக்கு சுயதொழிலுக்கு உதவ 13 இலட்சம் அனுப்புவதாக தெரிவித்தனர் அதற்கு நான் எனது வங்கிக்கணக்கின் மூலம் பணம் பெற மறுத்துவிட்டேன் இதனால் அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் வேர்வை மூலம் இப்பணிக்கு பணத்தை வழங்கினர் பேரவை இப் பணத்துக்காக பற்றுச்சீட்டும் 25.12.2012 என்ற திகதியில் அனுப்பிவைத்ததுடன் உதவி வழங்கியபின் புகைப்படம் ஏனைய ஆவணங்களை அனுப்பியது இப் பற்றுச்சீட்டும் அடிக்கட்டை இதன் கீழ் உள்ளது 13000 கனேடிய டொலர் என கூறும் தங்கவேல் 13000 ரூபாயை பேரவைக்கு அனுப்பி விட்டு மிகுதியை சுறுட்டி விட்டார் போலும் ஒரு அமைப்பு மூலம் இச்செயற்பாட்டை மேற்கொண்டு விட்டு 11 வருடம் கழிந்த பின் இலங்கைத் தமிழரசுக் கட்சியை நீதிமன்றத்தில் நிறுத்திவிட்டு தமது விமானிகள் பதவிக்கு வரவேண்டும் என்பதற்காக தங்கவேல் இலஞ்சம் ஊழலற்ற வாழும் எம்மை கள்ளனாக்க முனைகின்றனர் இவர் மக்களை ஏமாற்றலாம் ஆனால் இவரால் கடவுளை ஏமாற்ற முடியாது 91 வயதிலும் பாவத்தை சொத்தாக சேர்க்கின்றனர் இன்னும் தேவையற்றது தொடர்வாரானால் மேலும் இவர் சார்பான விடயங்களை வெளியிட வேண்டி வரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என இவர்கள் இதுவரை சேர்த்த பணவிபரங்களையும் அதன் செலவுகளையும் நக்கீரன் என்னும் தங்கவேல் வெளியிட வருவாரா