தேசிய சாரணர் ஜம்போரி 4 நாள் நிகழ்வின் போது!
எம். எப். றிபாஸ்
இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் திருகோணமலையில் கடந்த இருபதாம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ள பத்தாவது தேசிய சாரணர் ஜம்போரி எதிர்வரும் திங்கட்கிழமை 26 ஆம் திகதி முடிவடையவுள்ளது.
பிரதம சாரண ஆணையாளர் ஜனப்ரித்பெனாண்டோ தலைமையில் நடைபெற்றுக் கொண்டியிருக்கின்ற இந் நிகழ்வை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்து வைத்தார். சுமார் 12ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு சரணர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ச்சியாக ஆறு நாள்கள் நடைபெறவுள்ள இச்சாரணர் ஜம்போரி நிகழ்வில் சாரணர்களின் பலவிதமான பயிற்சி நிகழ்வுகளும், சிநேகபூர்வமான உறவாடல்களும், சகல இன சாரணர்களும் ஒற்றுமையுடன் தங்களது செயற்பாடுகளில் ஈடுபட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதே வேளை அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரணர் சங்கத்திலிருந்து இருநூறு சாரணர்களுடன் மாவட்ட சாரண ஆணையாளர் எம். ஐ. உதுமாலெவ்வை, தவிசாளர் யூ. எல். எம். ஹாசிம், உதவி மாவட்ட ஆணையாளர்களன எம்.எப். றிபாஸ், லத்தீப், ஐ. எல். எம்.இப்றாகிம் மற்றும் சாரண ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்