வாழவைத்தகுளம் பிரதேச தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு வியாபார தள்ளு வண்டிகள் !
(அஸ்ஹர் இப்றாஹிம்)
வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் வேண்டுகோளின் பேரில் குவைத் நாட்டின் நிதி பங்களிப்பில் அல்- ஹிமா நிறுவனத்தின் அனுசரணையில் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான நான்கு சக்கர வியாபாரத் தள்ளுவண்டிகள் தெரிவு செய்யப்பட்ட ஐந்து பயனாளிகளுக்கு அண்மையில் வாழவைத்தகுளம் அல்-பதாலாஹ் கல்வி வளாகத்தில் வைத்து இராஜாங்க அமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டன.