கட்சியின் இருப்பை காப்பதற்காக பதவி துறந்தார் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவர்
தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாக குழுத்தெரிவுக்கு எதிராக நீதிமன்றத்தால் பெறப்பட்ட தடை உத்தரவு மற்றும் மகாநாட்டை நடத்துவது தொடர்பான கட்டாணைகள் பெறப்பட்ட வழக்கு இன்று திருமலை மாவட்டத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. எதிராளிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள திரு சுமந்திரன் அவர்களை தவிர மற்ற அனைவரும் மன்றுக்கு ஆஜராகி இருந்தார்கள்.
மக்கள் நலன் கருதியும் கட்சியின் எதிர்கால இருப்பு கருதியும் வழக்கறிகள் கோரி இருந்த கோரிக்கைகளுக்கு இசைவாக எதிராளிகள் தரப்பிலிருந்து சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டன இது சற்றும் எதிர்பார்க்காத ஒரு விடயமாக அமைந்திருந்தது
இதன் பிரகாரம் தமிழரசு கட்சியின் புதிய தலைவர் தேர்வு உட்பட அனைத்து நிர்வாக குழு உறுப்பினர்களின் தெரிவுகளும் ரத்து செய்யப்பட்டன அத்தோடு யாப்பின் பிரகாரம் புதிய நிர்வாகக் குழுவை நியமிப்பதற்கான உடன்பாடும் காணப்பட்டது ஜனாதிபதி சட்டத்தரணி கே வி தவறாசா அவர்களால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணத்தில் தமிழரசு கட்சியின் 75 கால வரலாற்றில் இப்பொழுதுதான் முதன்முறையாக தேர்தல் அடிப்படையில் ஒரு தலைவர் தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றார் அப்படி தெரிவு செய்யப்பட்ட தலைவர் கட்சியின் நலன் கருதி தனது பதவி விட்டுக் கொடுப்பதற்கு முன் வந்திருக்கின்றார் அத்தோடு இதுவரை கால வரலாற்றில் கட்சியில் பல்வேறு திருத்தங்களும் நிர்வாகத் தெரிவுகளும் பதவி நிலை நியமனங்களும் சம்பிரதாயபூர்வமாக செய்யப்பட்டு வந்திருந்தது அவற்றை எதிர்த்து யாரும் இதுவரை நீதிமன்றம் செல்லவில்லை என்பதை மன்று கவனத்தில் கொள்ள வேண்டும் என்று வேண்டினார் மேலும் வெற்றி தோல்விக்கு அப்பால் கட்சியின் இருப்பை பாதுகாக்க வேண்டியது எமது தார்மீக கடமை என்ற அடிப்படையில்நாம் செயற்பட்டு கொண்டிருக்கும் பொழுது சிலர் தமது குறுகிய நோக்கங்களை அடைந்து கொள்வதற்காகவும் கட்சியின் இருப்பை சிதைப்பதாகவும் தேர்தல் காலங்களில் கட்சியை சிக்கலுக்குள் தள்ளுவதற்கு எடுக்கப்படுகின்ற ஒரு முயற்சியாகவுமே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதை மன்று கவனிக்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாக மன்றுக்கு தெரிவித்தார் .
இதன் பிரகாரம் மன்றுக்கு ஆஜராகாமல் இருந்த திரு சுமந்திரன் அவர்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளாமல் இந்த வழக்கு ஒரு தீர்ப்புக்கு வர முடியாத நிலை காணப்பட்டது அதனால் இவ்வழக்கு எதிர்வரும் ஏப்ரல் ஐந்தாம் தேதிக்கு திகதி குறிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது