கல்முனை கல்வி வலயத்தின் மற்றும் ஒரு சாதனை நிகழ்வு!
நூருல் ஹூதா உமர்
2023 இல் நடைபெற்ற தேசிய மட்ட சமூக விஞ்ஞான போட்டியில் கிழக்கு மாகாணத்தில் முதலிடம் 04 மாணவர்களும், இரண்டாம் இடம் 11 மாணவர்களும், மூன்றாம் இடம் 08 மாணவர்களுமாக 23 இடங்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. இதன் அடிப்படையில் 17 வலயங்களில் 09 வலயங்கள் 1ஆம், 2ஆம், 3ஆம் இடங்களை பெற்றுள்ளன. இதில் கல்முனை கல்வி வலயம் ஐந்து இடங்களை பெற்று மாகாணத்தில் முதலாவது இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது.
இதில் கல்முனை கல்வி மாவட்டத்திற்கான ஒன்பது இடங்களில் கல்முனை கல்வி வலயம் ஐந்து இடங்களை பெற்று கல்முனை கல்வி மாவட்டத்திலும் முதலாவது இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது. அதில் கல்முனை வலயம் 05 இடங்கள், சம்மாந்துறை வலயம் 02 இடங்கள், அக்கரைப்பற்று வலயம் 02 இடங்கள் பெற்றுக்கொண்டுள்ளன.
இந்த மாபெரும் வெற்றிக்கு ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலை அதிபர்களுக்கும், சமூக விஞ்ஞான பாடங்களை கற்பித்த ஆசிரியர்களுக்கும், சமூக விஞ்ஞான போட்டிக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்திய ஆசிரியர்களுக்கும், வலயத்தின் விடய இணைப்பாளராக செயற்பட்ட ஆசிரிய ஆலோசகர் பி.டீ. எம். மஹ்றுப் அவர்களுக்கும், ஆலோசனை வழிகாட்டல்களை வழங்கிய பிரதிக் கல்விப்பணிப்பாளர்காளான பீ.ஜிஹானா ஆலீப், எம்.எச். றியாஸா, ஆசிரிய ஆலோசகர் கே. டேவிட் ஆகியோருக்கு கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ்.சஹூதுல் நஜீம் நன்றிகளை வலயம் சார்பாகத் தெரிவித்துக் கொண்டுள்ளார்