மத்ரஸா மாணவனின் மர்ம மரணம் விவகாரம்: மௌலவி உட்பட நால்வர் விளக்க மறியலில்!
பாறுக் ஷிஹான்
மாணவனின் மர்ம மரணம் தொடர்பிலான சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருள்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் மௌலவி உட்பட 4 சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு வியாழக்கிழமை கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் மௌலவி உட்பட சிசிடிவி காணொளிகளை அழித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 4 சந்தேக நபர்களும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
குறித்த சம்பவத்தில் கைதான மௌலவி உட்பட ஏனைய கைது செய்யப்பட்ட 30 ,26, 22, 23 ,வயது மதிக்கத்தக்க 4 சந்தேக நபர்களையும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட் போது எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
மேலும் கடந்த நீதிமன்ற தவணையின் போது விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட குறித்த வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி உட்பட ஏனைய தரப்பினரின் விடயங்களை ஆராய்ந்த நீதிவான், நீண்ட சமர்ப்பணத்தின் பின்னர் மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருள்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் மௌலவி உட்பட 4 சந்தேக நபர்களை எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.