நோர்வே சேதுவுக்கு எதிரான குற்றச்சாட்டில் பின்வாங்கிய பயங்கரவாத தடுப்பு பொலிஸார்!

 

கிளிநொச்சி – தருமபுரம் பகுதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசியல்வாதியை சமூக வலைத்தளத்தினூடாக அச்சுறுத்தி பணம் பெற முயன்றார் எனப் போலி குற்றச்சாட்டைச் சுமத்தி நோர்வே ஊடகவியலாளன் நடராஜா சேதுரூபன் என்பவரை 2019 ஆம் ஆண்டு நெல்லியடி பொலிஸார் கைது செய்து பயங்கரவாத தடுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி நீதிமன்றால் சட்டத்திற்கு முரணான முறையில் தடுத்துவைத்து பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

சந்தேக நபர் இரண்டு லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டு கடந்த 5 வருடமாக வழக்கு நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த வாரம் நடராஜா சேதுரூபன் எவரையும் சமூக வலைத்தளத்தினூடாக அச்சுறுத்தி பணம் பெற முயற்சிக்கவில்லை அது போலியான குற்றச்சாட்டு என்று நீதிமன்றின் கவனத்திற்கு சட்டத்தரணிகள் கொண்டு வந்தனர்;.

சமூக வலைத்தளங்களின் ஊடாக பொய்யான செய்திகளைப் பரப்பி அச்சுறுத்தல் விடுத்து பண மோசடிகளை மேற்கொண்டு வந்ததாக நோர்வேயில் வசிக்கும் இலங்கையரான சேதுரூபன் என்பவர் மீது போலி வழக்கு பதியபட்டு 2019 ஆம் ஆண்ட யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி எம். சிவபாலசுப்ரமணியம் சட்டத்திற்கு முரணான முறையில் உத்தரவிட்டார்.

நடராஜா சேதுரூபன் தரப்பு சட்டத்தரணிகளால் நகர்த்தல் பத்திரத்தின் ஊடாக வழக்குத் தொடரப்பட்டு சந்தேக நபரான சேதுரூபன் இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான ஒரு சரீரப் பிணையில் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.

05 வருடங்களின் பின்னர் இது போலியான குற்றச்சாட்டு என்று பொலிஸார் நீதிமன்றில் தெரியப்படுத்தி உள்ளனர்.