ஏறாவூர் கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலைய ஏற்பாட்டில் இலவச நோயாளர் பராமரிப்பு பயிற்சி!
(அஸ்ஹர் இப்றாஹிம்)
‘நோயாளர் பராமரிப்பு’ பயிற்சிநெறியின் 37 ஆவது பிரிவினருக்கான பயிற்சிநெறி அண்மையில் ஏறாவூர் கிழக்கு புற்றுநோய் பராமரிப்பு நிலையத்தில் நடைபெற்றது.
மேல்மாகாணம் உள்ளிட்ட தூர இடங்களிலிருந்து பலர் இதில் கலந்துகொள்ள ஆர்வத்தோடு வந்திருந்தனர்.
இரண்டுநாள்கள் தொடர்ச்சியாக முழுநேரமாக நடைபெற்ற இந்த பயிற்சிநெறியில் நோயாளர் பராமரிப்பு தொடர்பான அடிப்படை அம்சங்கள் அனைத்தும் கற்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.