மண்ணும் மனிதர்களும் சிறுகதை நூல் திருகோணமலையில் வெளியீட்டு விழா!
(ஹஸ்பர் ஏ.எச்)
அன்பின் பாதையின் எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் இலக்சுமி பிரசுராலயத்தின் வெளியீட்டில் உருவான யோர்ச் அருளானந்தம் (நியூஸிலாந்து) எழுதிய ‘மண்ணும் மனிதர்களும்’ சிறுகதை நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை மாலை 4.20 மணியளவில் திருகோணமலை நகராட்சி மன்ற பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் கனக.தீபகாந்தன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக திருகோணமலை நகராட்சி மன்றத்தின் செயலாளர் வெ.இராஜசேகர் கலந்து சிறப்பித்தார், அவருக்கு நூலின் முதல் பிரதி வழங்கி வெளியிட்டு வைக்கப்பட்டது.
அவர் சிறப்புரை வழங்குவதையும், நூல் நயவுரையை கவிஞர் க . யோகானந்தன் நிகழ்த்தினார்.
இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் சிறுகதை நூல் இலவசமாகவே வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது