முஷாரப் எம்.பி யின் கருத்துக்கு கண்டனம்
கே எ ஹமீட்
கிழக்கு மாகாணத்தில் நிருவாக ரீதியாக புறக்கணிக்கப்படும் முஸ்லிம் நிருவாகிகள் தகுதியற்றவர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ முஷாரப் தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாக அ.இ.ம.காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் அமீர் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை யாடோ விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் கலந்துகொண்டு பல்வேறு கேள்விகளுக்கு பதில் வழங்கி நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப்பிடம் ஊடகவியலாளர்கள் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வரும் நிர்வாக சமநிலையற்ற தன்மைகள் தொடர்பில் கேள்வியினை எழுப்பியருந்தனர்.
கிழக்கு மாகாணத்தில் தீர்மானம் மேற்கொள்ளும் எந்த பதவி நிலையிலும் எவரும் இல்லை என்றும், பல்வேறு பதவி நிலைகளுக்கு முஸ்லிம் நிர்வாகிகள் உள்ளவாங்கப்படவில்லை என்றும் இதற்கு ஏன் நீங்கள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று கேட்டிருந்தனர். ஆனால் அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கிய பதிலானது நிருவாக ரீதியில் சிரேஷ்டத்துவம் மிகுந்தவர்கள் அந்தப் பதவிக்கு பொருத்தமற்றவர்கள், ஆளுமையற்றவர்கள் என கூறியிருக்கின்றமை மிகுந்த கண்டனத்துக்குரியதாகும்.
கிழக்கு மாகாணத்தில் பணியாற்றும் முஸ்லிம் சிரேஷ்டத்துவம் மிக்கவர்களை அவமானப்படுத்தியிருப்பதாகவே இதனூடாக அறிந்துகொள்ளமுடிகின்றது. தத்தமது சுயநலங்களுக்கு எமது சமூகத்தையும், சமூகத்திலுள்ள சிரேஷ்டத்துவம் மிகுந்த உயர் அதிகாரிகளையும் பலிகொடுப்பதாகவே இந்தக் கருத்தைப் புரிந்துகொள்வதாக அவர் தெரிவித்தார். (