களுவன்கேணி பாடசாலை மைதான வீதி, வந்தாறுமூலை வீதி மக்கள் பாவனைக்கு
!
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தனின் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மாவட்டம் பூராகவும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்யும் வீதிகள் இனம் கண்டு அவற்றை செப்பனிட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவில் 1.3 கிலோமீற்றர் நீளமான களுவன்கேணி பாடசாலை மைதான வீதி காபெட் வீதியாகவும், 160ஆ நீளமான வந்தாறுமூலை உள்ளக வீதி கொங்கிரீட் வீதியாகவும் செப்பனிட்டு சம்பிரதாய பூர்வமாக மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்திருந்ததோடு குறித்த வீதிகளை சம்பிரதாயபூர்வமாக மக்கள் பாவனைக்குக் கையளித்திருந்தார்.
இதன்போது களுவன்கேணி ஸ்ரீமுருகன் ஆலய பிரதமகுரு நிமல்றாஜ் சர்மா, வீதி அபிவிருத்தி அதிகாரசபை நிறைவேற்று பொறியியாலாளர் எந்திரி யு.லிங்கேஸ்வரன், களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலய அதிபர் விராத்தனன், எமது கட்சியின் பிரதம பொருளாளர் தேவராஜன், மாவட்ட அமைப்பாளர் திருநாவுக்கரசு, ஏறாவூர் பற்று முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கோணேஸ்வரன், கட்சியின் ஏறாவூர் பற்று பிரதேசக் குழு தலைவர் இராஜேந்திரன் உட்பட முக்கியஸ்தர்கள், ஆர்டிஜி உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.