நிந்தவூர் பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தால் ரமழான் பொதிகள் வழங்கல்!
(அஸ்ஹர் இப்றாஹிம்)
நிந்தவூர் பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தினால் புனித ரமழானை முன்னிட்டு அங்கத்தவர்களுக்கு ரமழான் பொதிகள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.
நிந்தவூர் பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ எம் அப்துல் லத்தீப், நிர்வாக உத்தியோகத்தர் ஏ எம் சரீம், கணக்காளர்
சாஜிதா பர்வின், திட்டமிடல் பிரதிப் பனிப்பாளர் ஏ எம் சுல்பிகார் அலி , உட்பட பலரும் கலந்து கொண்டனர்
இதன் போது நிந்தவூர் பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்க அங்கத்தினர்கள் சுமார் 300 பேருக்கு ரமழான் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.