கல்முனையன்ஸ் போரத்தால் ஸஹர் உணவு விநியோகம்
நூருல் ஹூதா உமர்
கல்முனையில் உள்ள அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் நோயாளிகளுடன் தங்கியுள்ளவர்களுக்கும், கல்முனையில் தங்கியுள்ள வெளியூர் பயணிகளுக்கும் புனித நோன்பை நோற்க ஸஹர் உணவு இலவசமாக வழங்க கல்முனையன்ஸ் போரம் ஏற்பாடு செய்துள்ளது.
ஸஹர் உணவு தேவைப்படுபவர்கள் 0777849423 , 0767969913 ஆகிய தொலைபேசி இலக்கங்களை மாலை 5 மணி முதல் 07 மணிக்குள் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளுமாறும் ஸஹர் நேரத்தில் உங்கள் காலடிக்கே நேரில் வந்து ஸஹர் உணவு வழங்கப்படும் என்றும் வைத்தியசாலைகளில் நோயாளிகளுடன் தங்கியுள்ளவர்களும், பல்வேறு தேவைகளுக்காக வெளியூர்களிலிருந்து கல்முனைக்கு வருகை தருபவர்களும் ரமழான் மாதத்தில் ஸஹர் உணவை பெற்றுக்கொள்வதில் உள்ள சிக்கல் நிலையை கருத்திற்கொண்டு கல்முனையன்ஸ் போரம் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது என கல்முனையன்ஸ் போரம் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.