சாய்ந்தமருதில் நிதாஉல் பீர் சமூகசேவை அமைப்பின் உலருணவு பொதிகள் வழங்கல்!
நூருல் ஹூதா உமர்
கல்முனை நிதாஉல் பீர் சமூகசேவை அமைப்பால் புனித ரமழானை முன்னிட்டு தேவையுடைய மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு கடந்த திங்கள், செவ்வாய் அந்த அமைப்பின் ஸ்தாபகர் அல் ஹாஜ் இசட்.எம். அமீன் அவர்களது இல்லத்தில் இடம்பெற்றது.
நிதா உல் பிர் அமைப்பின் ஸ்தாபகத்தலைவரும் பிரபல சமூக சேவையாளருமான அல்ஹாஜ் இசட்.எம். அமீன் அவர்களது தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கல்முனை சாய்ந்தமருது மற்றும் காரைதீவு ஆகிய பிரதேச செயலகங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சுமார் 1000 பயனாளிகளுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இப்பொதியில் அரசி, சீனி, பருப்பு, ஈத்தம் பழம், தேயிலைத்தூள், வெங்காயம், கிழங்கு, கரட் உட்பட மேலும் சில மரக்கறி வகைகளும் அடங்யிருந்தன.
இந்நிகழ்வுக்கு விஷேட பேச்சாளராக மருதமுனை தாருல் ஹூதா பெண்கள் கல்லூரியின் விரிவுரையாளர் அஷ்ஷேய்க் எம்.ஐ.எம். ஜிபான் (மதனி) கலந்து கொண்டார.;
இதில் நிதாஉல் பிர் அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகர்களான ஏ.பி.எம். அஸ்ஹர் மௌலவி அலி ஜின்னா, கல்முனை பிரதேச செயலக திட்டமிடல் உதவிப்பணிப்பாளர் எம்.ஜௌபர், சாய்ந்தமருது பிரதேச செயலக தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சி.எம்.நஜீம், சமூக சேவையாளரும் வர்த்தகருமான எம்.ஜிப்ரி, சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி சமூக சேவைப்பிரிவின் உத்தியோகத்தர் யூ.எல்..ஜௌபர் உட்பட நலன் விரும்பிகள் மற்றும் நிதா உல் பிர் அமைப்பின் ஸ்தாபகத்தலைவரும் பிரபல சமூக சேவையாளருமான இசட்.எம். அமீன், ஹாஜியாரின் குடும்ப உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதே வேளை கல்முனை மற்றும் சாயந்தமருது ஆகிய பிரதேசங்களிலுள்ள பள்ளிவாயல்கள் சிலவற்றில் கடமையாற்றும் இமாம்கள் மற்றும் முஅத்தின்களுக்குமான விஷேட பொதிகளும் இங்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.