தம்பலகாமத்தில் மகளிர்தின நிகழ்வு!
ஏ.எச் ஹஸ்பர்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தம்பலகாமம் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த மகளிர் தின நிகழ்வு தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.’அவளுடைய பலம் நாட்டிற்கு முன்னேற்றம்’எனும் தொனிப்பொருளின் கீழ் இம் முறை மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
இதில் பெண்தொழில் சுயமுயற்சியாண்மையாளர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். இதில் உள்ளூர் உற்பத்தியின் சந்தை மற்றும் பெண்களுக்கான நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வும் இடம் பெற்றதுடன் கலை, கலாசார நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.
இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், தம்பலகாமம் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் மலர்விழி, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இலங்கை வங்கி கிளை உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.