இலங்கை – இஸ்ரேல் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
இலங்கை மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன என அந்த நாட்டுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.
தற்போது காணப்படும் மோதல் நிலைமைகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் இஸ்ரேலுக்கு பயணிப்பதற்காக விமான ஆசனங்களைப் பதிவு செய்த இலங்கையர்கள், அந்தந்த நிறுவனங்களைத் தொடர்புகொண்டு பயணத் திகதியை மாற்றிக்கொள்ளுமாறு இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் அறிவுறுத்தியுள்ளார்.