தான் தயாரித்த கல்லறையில் அடக்கம் செய்யப்படவுள்ள பாலித உடல்
மறைந்த முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் இன்று (19) இடம்பெறவுள்ள நிலையில் பாலித தெவரப்பெரும உயிருடன் இருக்கும் போது தாமே தயாரித்த கல்லறையில் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளதாக குடும்ப உறுப்பினர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 2 மணி அள.வில் அவரின் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளன
பாலித தெவரப்பெரும கடந்த 16 ஆம் திகதி மின்சாரம் தாக்கிதனது 64வது வயதில் உயிரிழந்தார்.
2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராகவும், உள்நாட்டலுவல்கள், வடமேற்கு அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சராகவும் மற்றும் வனவிலங்கு பிரதி அமைச்சராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.அன்னாரது உடல் தற்போது, மத்துகமை, யட்டதொலவத்தமு பகுதியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது