மட்டக்களப்பில் முதலை கடிக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் முதலைக் கடிக்கு இலக்காகி நபர் ஒருவர் உயிழந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் இன்று உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டிருந்தனர்.
வழக்கம் போல் முறுத்தானையில் உள்ள வெத்திலை போட்ட மடு குளப் பகுதியில் கட்டு வலை கட்டி மீன் பிடியில் ஈடுபட்ட நிலையிலேயே இவ்வாறு முதலைக் கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
67 வயதான 3 பிள்ளைகளின் தந்தையான உயிரிழந்தவரின் சடலத்தின் உடற் கூற்றாய்வினை சுகாதார வைத்திய அதிகாரி எச்.எம்.எம்.முஸ்தபா மேற்கொண்டிருந்தார்.
மரண விசாரணைகளை கோறளைப்பற்று திடீர் மரண விசாரணை அதிகாரி அ.ரமேஸ்ஆனந் மேற்கொண்டிருந்தார்.