இன்றைய நாள் எப்படி – 22 ஏப்ரல் 2024
22/04/2024 திங்கடகிழமை
1)மேஷம்:-
முக்கிய புள்ளிகளின் ஒத்துழைப்போடு தக்கவிதத்தில் தன வரவும் வந்து சேரும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும் வாய்ப்பு உண்டு.
2)ரிஷபம் :-
காரியத்தை தொடங்கி விட்டால் பணம் தானாக வந்து சேரும். கேட்ட இடத்தில் உதவிகளும் கிடைக்கும். கூட்டு முயற்சியிலிருந்து விலகி தனித்து இயங்க முற்படுவீர்கள்.
3)மிதுனம்:-
வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். வெளிநாட்டில் உள்ள உறவினர்களின் அழைப்பின் பேரில் உல்லாச பயணம் செய்யும் சூழ்நிலையும் உருவாகும்.
4)கடகம்:-
உத்தியோகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர வாய்ப்பு உண்டு. தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தொழிலை விரிவு செய்வதற்காக கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.
5)சிம்மம்:-
மூட்டு வலி, முழங்கால் வலி என்று ஏதாவது ஒரு தொல்லை வந்து கொண்டே இருக்கும். வாகன படுத்துகளால் வட்டம் ஏற்படும்.
6)கன்னி:-
எதிர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் லாகா மாற்றம் உருவாகலாம். பொருளாதாரம் திருப்தி தரும். புதிய பயணங்கள் அதிகரிக்கும்.
7)துலாம்:-
கடன் சுமை பாதிக்கு மேல் குறையும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. வண்டி வாகனங்கள் வாங்கும் முயற்சி கைகூடும்.
8)விருச்சிகம்:-
தொழிலில் எதிர்பார்த்ததை காட்டிலும் கூடுதலாவும் கிடைக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. அதிகார பதவியில் உள்ளவர்களின் ஆதரவோடு பொது வாழ்வில் புகழ் குவிப்பீர்கள்.
9)தனுசு:-
உடன்பிறப்புகள் குணமறிந்து நடந்து கொள்வர். கொடுக்கல் வாங்கல்கள் சீரும் சிறப்புமாக இருக்கும். வீட்டுக்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழுவீர்கள்.
10)மகரம்:-
வீடு இடம் வாங்கும் யோகம் உண்டு. கட்டிய வீட்டை பழுது பார்க்கும் முயற்சி ஒரு சிலருக்கு கை ககூடும். தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும்.
11)கும்பம்:-
உத்தியோகத்தில் உள்ளவர்கள் சிறப்பாக பணிபுரிந்து மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவர். தொழில் தொடர்பாக எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
12)மீனம்:-
தொழில் சிறப்பாக நடைபெறும். அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்பு வந்து சேரும். கைவிட்டு போன பொருள் மீண்டும் கிடைக்கும்.