ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்குழு
ஈஸ்டர் குண்டு தாக்குதலின் உண்மையை வெளிக்கொணர ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் விசேட விசாரணைக் குழுவொன்று ஸ்தாபிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்றய பாராளுமன்றத்தில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் புலனாய்வாளர்களைக் கொண்ட இந்த விசாரணை ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.
விசாரணையை வலுப்படுத்த நிரந்தர விசாரணை அலுவலகம் ஸ்தாபிக்கப்படும் எனவும், ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.