வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் முன்னெடுக்க தீர்மானம்
வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் 29 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டமொன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் இதனை அறிவித்துள்ளனர்.