இன்றைய நாள் எப்படி – 29 ஏப்ரல் 2024
29/04/2024 திங்கட்கிழமை
1)மேஷம்:-
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்பட வேண்டும். வேலைகளில் ஏற்பட்ட தவறுக்காக உயரதிகாரியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
2)ரிஷபம் :-
பயணங்களை தவிர்க்கவும். தகுந்த நண்பர்களின் உதவியுடன் செயல்களில் வெற்றி காண்பீர்கள். பணவரவு தாமதமாகும்.
3)மிதுனம்:-
ஜாமீன் கையெழுத்து இடுவதை தவிர்க்கவும். உத்தியோகத்தர்கள் சிலருக்கு உயர் அதிகாரிகளின் விருப்பப்படி முக்கிய நபரின் வேலையை உடனடியாக செய்து கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.
4)கடகம்:-
கொடுக்கல் வாங்கல்களில் நிதானத்தை கடைப்பிடியுங்கள். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
5)சிம்மம்:-
உங்களுக்கு வரவேண்டிய தொகை நினைத்தபடி குறித்த நேரத்தில் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.
6)கன்னி:-
உத்தியோகத்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்க வாய்ப்பு உண்டு. சக பணியாளர்களின் வேலைகளையும் சேர்த்து செய்யும் நிலை ஏற்படலாம்.
7)துலாம்:-
செய்யும் காரியங்களில் அதிக முயற்சியுடன் ஈடுபடும் போது முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தர்கள் சிலர் தங்கள் வேலையை விட்டு அதிக ஆதாயம் உள்ள வேலைக்கு செல்ல முயற்சிப்பீர்கள் .
8)விருச்சிகம்:-
எதிலும் நிதானமான போக்கை கடைபிடிப்பது நல்லது. எளிதாக முடிக்கலாம் என்று கருதியை வேலையை அதிக முயற்சி மூலம் செய்து முடிப்பீர்கள்.
9)தனுசு:-
நண்பர்களின் ஒத்துழைப்பு இருந்தாலும் எடுக்கும் முயற்சிகளில் தாமதங்களை தவிர்க்க இயலாது. உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு அலுவலக பணி நிமிர்த்தம் வெளியூர் செல்லும் நிலை ஏற்படலாம்.
10)மகரம்:-
முக்கிய வேலைகளில் தொய்வு ஏற்படக்கூடிய வாரம் இது.நண்பர்கள் உங்கள் கண்களில் படாமல் போகலாம். உத்தியோகத்தர்கள் அவசரப்பட்டு செய்த வேலையில் பிரச்சனையை சந்திக்கலாம்.
11)கும்பம்:-
நீங்கள் நல்ல முறையில் நடந்து கொண்டாலும் சச்சரவுகள் தேடி வரக்கூடும். நிறைவு பெறாத காரியங்களை செய்து முடிக்க தகுந்த நண்பர்களின் உதவியை நாடுவீர்கள்.
12)மீனம்:-
பல செயல்கள் உங்கள் விருப்பம் போல நடைபெறுவதால் மனதில் உற்சாகம் கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு எதிர்பார்த்த கடன் தொகை கிடைத்து பாதையில் இருந்த பணியை தொடர்வீர்கள்.