கொலை செய்யப்பட்ட குழந்தை -தயார் கைது
மஹாபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹலந்துருவ வீதி, ராகம பிரதேசத்தில் வசிக்கும் 9 மாத பெண் குழந்தையொன்று கொலை செய்யப்பட்டுள்ளது.
நேற்று காலை குழந்தையை யாரோ எடுத்துச் சென்றதாக குழந்தையின் தந்தை முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து முறைப்பாட்டாளர் வசித்த வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் பெண் சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
விசாரணையில் குழந்தையை தாய் கிணற்றில் போட்டது தெரியவந்ததுள்ளது.அதன்படி தாயாரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்தனர்.அதே பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய பெண்ணே கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹாபாகே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.