மாவீரர் துயிலுமில்லக் காணி மக்கள் எதிர்ப்பில் முறியடிப்பு
முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலுமில்லக் காணியை சுவீகரித்து இராணுவத்தினருக்கு வழங்குவதற்காக இன்றைய தினம் நடைபெறவிருந்த அளவீட்டுப் பணி மக்களின் எதிர்ப்பினால் தடுத்துநிறுத்தப்பட்டுள்ளது.
இக்காணியினை சுவீகரித்து இராணுவத்திற்கு வழங்குவதற்காக இதற்கு முன்னரும் பல தடவைகள் அளவீட்டுப் பணிகள் நடைபெறவிருந்த நிலையில் மக்களால் தடுத்துநிறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.