கற்பிட்டி பிரதேச இளைஞர்கள் ஒன்றுகூடலும் சிரமதானமும்
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் )
கற்பிட்டி நடுப்புட்டி கிராமத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் இயற்கை தாவரங்கள் மற்றும் அழிவடைந்து செல்லும் மருத்துவ தாவரங்களை பாதுகாக்கும் வேலைத்திட்டம் நடுப்புட்டி இளைஞர் அமைப்பால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அவ்விடத்தை சுத்தம் செய்யும் சிரமதான பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சிரமதான பணி கற்பிட்டி நடுப்புட்டி இளைஞர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கற்பிட்டி பிரதேச இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது கற்பிட்டி நடுப்புட்டி இளைஞர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கற்பிட்டி பிரதேச இளைஞர்களை ஒன்றிணைத்து நெப்ஸோவின் இளைஞர் வேலைத்திட்டம் பற்றிய தெளிவூட்டி உணவுத் தன்னாதிக்கம் சுற்றாடலை பாதுகாத்தல் மற்றும் பிலாஸ்டிக் கழிவு பாவனைக்கு எதிரான வேலைத்திட்டம் பற்றிய தெளிவூட்டலை நெப்ஸோவின் கற்பிட்டி இணைப்பாளர் பத்மநாதன் வழங்கினார்.