கேப்டன் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது
தென்னிந்தியா நடிகரும் தே.மு.தி.க முன்னாள் தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.
விஜயகாந்தின் நினைவிடத்திற்கு 125 நாட்களில் 15 லட்சத்திற்கும் அதிக மக்கள் வருகை தந்து அஞ்சலி செலுத்தியுள்ளதாக பதிவாகியுள்ளது.
மேலும் நினைவிடமொன்றில் மக்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதலாவது நினைவிடமாக விஜயகாந்தின் நினைவிடம் பதிவாகியுள்ளது.
இந்த நிலையிலேய, விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.