வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்
யாழ்ப்பாணம் ஆவரங்கால் கிழக்கு பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரிய வராத நிலையில் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அச்சுவேலி பகுதியில் நேற்று முன்தினமும் இரு வீடுகள் மீது பெற்றோல் குண்டு மற்றும் கற்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தொடர்ச்சியாக வன்முறை கும்பல்கள் அட்டகாசம் செய்யும் நிலையில் பொலிஸார் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.